BREAKING NEWS

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் சிறப்பு நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு பீர்கான் தலைமை வகித்தார் துறை தலைவர்கள் ஜெயா, மோகன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நுண்கலை மன்ற தலைவர் டாக்டர் பிரேம்சுந்தர் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சுரண்டை வியாபாரிகள் சங்க செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கல்லூரி துறை தலைவர்கள் சக்திவேல், சரவணன், பேராசிரியர் வீரபுத்திரன் கௌரவ விரிவுரையாளர்கள் சித்திரைக்கனி, ஹரிஹரசுதன், ஹரிராம், ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மற்றும் சிறப்பு நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன முடிவில் தமிழ்த்துறை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார் இதற்கான ஏற்பாடுகளை நுண்கலை மன்ற நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )