தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், சந்தேக நபர்கள், பழங் குற்றவாளிகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சேகரித்த தகவல் அடிப்படையில்,..
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த 27 வயதான அனீஸ் என்பவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர் கைதான அனீஸ் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், குற்றவாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
CATEGORIES குற்றம்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசிதென்காசி மாவட்டம்பாவூர்சத்திரம் ரயில்வே கேட்பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறல்