BREAKING NEWS

தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் 

தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் 

வேலூர் மாவட்டம், வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த பி .பூவரசி க/பெ. புஷ்பராஜ். இவர்கள் இருக்கும் பக்கத்து தெருவான அம்பேத்கர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் மிகவும் கஷ்டப்பட்டு சீனிவாசன் நகரில் இருக்கும் ஒரு இடத்தை ரவிச்சந்திரன் த/பெ. நடராஜன், என். பிரபாகரன் த/ பெ. நடராஜன் என்ற அண்ணன், தம்பியான இவர்களுக்குச் சொந்தமான இடத்தை நான் என் பெயரில் பணம் கொடுத்து வாங்கினேன்.

பிறகு அந்த இடத்தை பி.பூவரசி கணவர் பெயர் புஷ்பராஜ் ஆகிய என்னுடைய பெயருக்கு அந்த இடத்தை முறைப்படி வேலூர் மாவட்ட பத்திரப் பதிவுத்துறையில் பணம் செலுத்தி அரசாங்கத்திடம் இருந்து என் பெயருக்கு மாறுதல் செய்து பத்திரம் பெற்றிருக்கிறேன். தற்போது நான் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு முன் வந்தேன்.

நான் வாங்கிய இடத்திற்கு பின்னால் காலஞ் சென்ற இடி மன்னன் என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இடது பக்கமாக போலீஸ்காரர் முருகேசன் என்பவரின் வீடு இருக்கிறது.

மேலும் நான் வாங்கிய இடது பக்க முன்புறமாக காலஞ் சென்ற பெருமாள் என்பவரின் வீடு இருக்கிறது .தற்போது அந்த பெருமாளின் மூத்த மகள் பி .நிர்மலா தகப்பனார் பெயர் பெருமாள் என்பவரும், நிர்மலாவின் தம்பி சம்பந்தமூர்த்தி என்பவரின் மருமகள் தீபா, மற்றும் தீபாவின் அம்மா கோகிலா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் அந்த வீட்டில் வசிப்பதற்கு எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும், தடங்கலும் இல்லை. ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து நான் வாங்கிய இடத்திற்கு முன்பாக செல்லும் தெருவில் பொது வழியை தன் இஷ்டம் போல் ஆக்கிரமிப்பு செய்து பொது வழியில் ஒரு சமையல் அறையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் சொல்லாமல் வீண் வம்பு, தகாத வார்த்தைகளால் என்னை பேசுகிறார்கள்.

அவர்கள் பொதுவாக போகும் அந்த பொது வழியை நான்தான் பயன்படுத்த வேண்டும். அதனால் பொது வழியை சமையலறை கட்டி பயன்படுத்தி வரும் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி எனக்கு போக வரும் வழியை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS