தேனியில் காங்கிரஸ் வெற்றி கொண்டாட்ட பேரணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வண்ணம் அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள்.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் இதமாகவும் அன்னை சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு,..
இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றியை இமாலய வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்த காங்கிரஸ் சார் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது மழையில் நனைந்தபடியே காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்று அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்த கொண்டாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சன்னாசி நகரத் தலைவர் முசாக் மந்திரி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.