BREAKING NEWS

தேனியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உலை வைக்கும் தேனி போக்குவரத்து நெரிசல்.

தேனியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உலை வைக்கும்  தேனி போக்குவரத்து நெரிசல்.

மதுரை – போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தொடக்கம் முதலே போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை வேகத்தில் பணி நடந்து வந்தது. 2015-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் 2015 வரை முதற்கட்ட பணிகளே முடிவடையாமல் இருந்தன. இதனால் வர்த்தகர் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பணியைத் துரிதப்படுத்தி விரைவில் ரயில் இயக்கப்பட வேண்டும் எனப் போராடி வந்தனர்.இதனால் இத்திட்டத்துக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன. முதல்கட்டமாக மதுரை – உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி – ஆண்டிபட்டி மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி – தேனி எனப் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

தற்போது நான்காம் கட்டமாக தேனி – போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. மதுரை – தேனி வரை பணிகள் அணைத்தும் முடிவடைந்தநிலையில் மதுரை – தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் மே 27-ம் தேதி முதல் இயக்கப்பட்து .மேலும் தற்பொழுது தினசரி இரண்டு முறை தேனி நகருக்குள் ரயில்வே சேவை இயக்கப்படுவதால் தேனியின் நுழைவாயிலான மதுரை மெயின் சாலை _புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன மேலும் காலை ஒன்பது முப்பத்தி ஐந்து மணி அளவில் தேனி நகருக்குள் ரயில் செல்லும் நேரத்தில் ரயில்வே கேட் சுமார் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக அடைக்கப்படுவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்து களுக்கும்ம் நெரிசல் ஏற்படுகிறது மேலும் அதே நேரத்தில் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் கடந்து செல்வதால் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக சொல்ல முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் களிமேட்டுப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்த அப்தாகீர் என்ற சமூக ஆர்வலர் தேசியக் கொடியை ஏந்தி தேனி இன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவை அளித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )