தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.
இதனை அறிந்த பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் அடிப்படையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.
திடீரென கோவில் இடித்து தரைமட்டம் ஆனதையடுத்து மறியல் வரை போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
CATEGORIES குற்றம்
TAGS ஆன்மிகம்காக்கி வாடன்பட்டி கிராமம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடிப்பு