BREAKING NEWS

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று  வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று வேலப்பர் கோவிலும் ஒன்றாகும்.

தமிழகத்தில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், இங்குள்ள மாவூற்று வேலப்பருக்கு தனிச் சிறப்பு உண்டு. 

 

இங்குள்ள கோவிலில் பூசாரியாக ” பளியர் ” இனத்து மக்கள் பரம்பரையாக பூஜை செய்து அருள்வாக்கு கொடுத்து வருகின்றனர். 

 

இங்கு ஜமீன் காலத்து சுயம்பு முருகன், மருது மரத்தின் வேரிலிருந்து வரும் ஊற்று நீர் , தெப்பம். இந்த தெப்பத்தில் குளித்து விட்டு முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்றும், நமது முன்னோர்கள் நமக்கு நன்மைகள் செய்வார்கள் என்ற ஐதீகம் வழக்கத்தில் உள்ளது.

 

தை பூசம் திருநாளை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பருக்கு 21 விஷேச அபிசேகம், சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

 

வேலப்பரை தரிசிக்க பக்தர்கள் அதிகாலையிலிருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு கோவில் வளாகப் பகுதியில் முருகன் பக்தி பாடல்கள் ஒலி பரப்பபட்டது.

 

மாவூற்று வேலவனை கான மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து பால்குடம், மொட்டை போன்ற நேத்தி கடன்களை செலுத்தினர்.

 

கோவில் வளாகத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

பக்தர்கள் வந்து செல்லுவதற்காக , ஆண்டிபட்டி பேரூந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு சிறப்பு பேரூந்துகள் இயக்கப் பட்டது.

 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் நதியா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS