தேனி அருகே நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தேனி மேலப்பேட்டையில் உள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுரசித்தும் வணங்கியும் வருகின்றனர்.

இந்த கொலுவில் பொம்மை யானை மணி அடிப்பது.தசாவதாரம்’அஷ்ட பைரவர்கள். மாமல்லபுர சிற்பங்கள். கலைமகள், அலைமகள். மலைமகள். கைலாயத்தில் சிவ குடும்பம் , இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் என,
ஆன்மீகம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருப்பது சிறப்பாக கருதப்பட்டு தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினர் ஏராளமானோர் வரலாற்று நிகழ்வுகளை கண்டுணர்ந்தும், ஆன்மீக கொலு பொம்மைகளை கண்டு வணங்கியும் செல்கின்றனர்.

தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தபின் நடந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
