BREAKING NEWS

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் நாராயணதேவன் பட்டியில் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் அஜித் மனைவி வீரம்மா.
இவர் இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தேனி ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.

 

அப்போது, எனது கணவரும் நானும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். நாங்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் தேதியன்று கம்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கலப்பு பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள், திருமணத்தை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

எனது கணவர், காமயகவுண்டன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின் உதவியாளராக பணிபுரிந்து வந்ததால் அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தோம்.

 

 

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி அன்று காலை காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பள்ளிக்கு எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மரில், எனது கணவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

அவர், இறந்த பின்பு நான் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து, யார்? ஆதரவின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகிறேன்‌. ஆகையால் எனக்கு நாராயணதேவன் பட்டி கள்ளர் பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியினை எனக்கு வழங்கி, எனது குழந்தைகளுக்கு வாழ்வாதார அளிக்குமாறு என்று வலியுறுத்தப்பட்ட கோரிக்கை மனுவினை தேனி ஆட்சியர் ஷஜீவான அவர்களிடம் வழங்கினார்.

 

CATEGORIES
TAGS