BREAKING NEWS

தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்

தேனி மாவட்டம், எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஜப்பசி மாத சனி பிரதோஷ தினத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கும் நந்தி பகவானுக்கும் பச்சரிசி மாவு, பால், , தயிர், சந்தனம் திருமஞ்சனம், தேன்,இளநீர், பலவகை பழங்கள்,திருநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை கொண்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யபட்டது.

பின்னர் சிவலிங்கத்திற்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இப்பிரதோஷ விழா நிகழ்ச்சியில் நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளி செயலாளர் நவமணி மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ ஸ்லோகத்தை பாடி சிவனை தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )