தேனி சுற்று வட்டார மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டுப்பட்டி, தாழையூத்து கிராமங்களில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மற்றும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை,
எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மலைவாழ் மக்களிடம் மஞ்சப்பை வழங்கி திட்டத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
CATEGORIES தேனி