தேனி பழைய பேருந்து நிலையம் அருகில்திமுக அரசை கண்டித்து அதிமுக வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர் தேனி முத்துராஜ்.
தேனி மாவட்டம்,
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தேனி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் எஸ் டி கே ஜக்கையன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் சற்குணம் மாவட்ட கழக பொருளாளர்
சோலை ராஜ் , முன்னால் மாவட்ட கழக செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் முறுக்கோடை ராமர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.