BREAKING NEWS

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்யும் அதானிக்கு துணை போகும் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜக ஆட்சியில், நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துக்களை குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராகவும், உலகத்தின் மூன்றாவது கோடீஸ்வரராவும் உயர்ந்தவர் கவுதம் அதானி.

 

 

சமீபத்தில் ஹின்டென்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்த பிறகு பங்கு சந்தையில் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

அதானி உயர்வுக்காக, எல் ஐ சி, எஸ் பி ஐ அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதற்காக ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

இதற்குப் பரிகாரமாக கார்பரேட்டுகள் மூலம கடந்த நான்கு ஆண்டுகளில் 5,270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க நன்கொடை பெற்றுள்ளது,

 

இத்தகைய ஊழல் பணத்தை சட்டப் பூர்வமாகப் பெற்று பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை நாட்டு மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது ? ஏதற்காக நடைபெறுகிறது? என்பதற்கு மோடி- அதானி கூட்டுக் கொள்கையை சிறந்த உதாரணமாகும் என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS