தேனி புதிய பேருந்து நிலையம் அருகே தேனி ஆட்சியர் புகைப்பட கண்காட்சி திறப்பு.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மைதானத்தில் தேனி ஆட்சியர் “ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை” புகைப்பட கண்காட்சியை திறந்த வைத்தார்.
தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் மைதானத்தில், தேனி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “ஓயா உழைப்பின் ஓராண்டு புகை பட கண்காட்சியினை இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், தேனி அல்லிநகரம் நகர மன்ற தலைவர் ரேணுப்பிரியா,
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை ஒட்டி சிலம்பம், பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், ட்ரம்ஸ் செட் வாத்திய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து தேனி ஆட்சியர் புகைப்படங்களை பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி சிறு கடைகளை பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி செய்திகள் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், உதவி மக்கள் தொடர்பாளர் விஜயகுமார் ஆய்வு செய்திருந்தனர்.