BREAKING NEWS

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பச்சை கெட்டி அசைத்து துவக்கி வைத்தனர்.

 

 

கோவில் காளை அவிழ்த்து விட்டு ஆரவாரமாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கிய நடைபெற்று வருகிறது.

 

கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் தேனி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் முன்னிலை வகிக்க ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்துள்ளனர்.

 

 

காலை ஏழு மணி அளவில் துவங்க உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக 750 காவலர்களும் முதலுதவிக்காக 200 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினரும், 

 

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

மூன்று குழுக்களாக மருத்துவர்கள் செவிலியர்கள் முதலுதவி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

தீவிர பரிசோதனைக்கு பிறகு மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என எட்டு மணி நேரத்திற்கு 400 வீரர்கள் களம் காண உள்ளனர்.

கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் சில்வர் அண்டா பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

 

 

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடு அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி ஆல்டோ கார் வழங்கப்பட உள்ளது

சிறந்த இரண்டு மாடுகளுக்கு டிவிஎஸ் பைக் எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட உள்ளது.

தங்க காசு வெள்ளி காசு குத்துவிளக்கு பீரோ எல்இடி டிவி டைனிங் டேபிள் என ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு மழை பொழிந்து வருகிறது.

 

CATEGORIES
TAGS