தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் கள ஆய்வு செய்து வரும் நிலையில் வரும் ஆறாம் தேதி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் தேனி மாவட்ட கள ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரை வரவுள்ளார்.
இதை முன்னிட்டு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தேனி மாவட்டத்தில் உள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் பேருந்து நிலைய கட்டுமானங்கள் தினசரி காய்கறி மார்க்கெட் கூட்டுக் குடிநீர் திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர்
போடி பரமசிவன் கோயில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் வைகை அணையில் தெங்கரை பேரூராட்சி கூட்டு குடிநீர் திட்டம் தேவாரம் பேருந்து நிலையம் கம்பம் மார்க்கெட் கடமலைக்குண்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏழு இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து செய்தி அவர்களை சந்தித்த கே என் நேரு கூறுகையில்..
வரும் ஆறாம் தேதி மதுரை தேனி சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட கள ஆய்விற்காக தமிழக முதல்வர் மதுரை வருவதை முன்னிட்டு தங்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை கள ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கள ஆய்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமைச் செயலர் சிவதாஸ் விநாயகம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.