BREAKING NEWS

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில்,
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து எதிர்புரம் உள்ள தனியார் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கடைகள் ஆரம்பிக்கபட்டு அரசு விதிமுறையை பின்பற்றாமல் அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி மது கடைகள் மற்றும் மதுபான பார்களை இயக்கி வருகின்றனர்.

 

 

குறிப்பாக தேனி – கம்பம் தேசிய நெடுச்சாலையில் TN-60 என்ற பெயரில் மன மகிழ் மன்றம் சட்ட விரோதமாக தொடங்கபட்டு இணை ஆணையர் உதவியோடு சட்ட விரோத மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது’.

 

மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு 25க்கும் மேற்பட்ட நபர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது மனமகிழ் மன்றம் ஆகும். ஆனால் விதி முறைக்கு புறப்பாக பதிவு செய்துவிட்டு, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியிலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு, பெண்கள் விடுதி, கோவில் உள்ள பகுதியில் இயங்கிவருகிறது.

 

 

எனவே தேனி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மனமகிழ் (மது கடை ) மன்றத்தை அப்புறப்படுத்த கோரி பல முறை கோரிக்கை வைத்தும் அகற்றப்படாத காரணத்தால் சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் குரு அய்யப்பன், சட்டரீதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டும் கலால் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டு அகற்றப் படவில்லை.

 

எனவே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை உடனடியாக அகற்றக் கோரி இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )