தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
தமிழக முழுவதும் தமிழரின் ஒற்றுமையை நிலைநாட்டு வண்ணம் அனைத்தும் மதத்தவரும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் சமூக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதினா பள்ளி வாசலில் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக உத்தமபாளையம் உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் மதுகுமாரி அவர்கள் கலந்து கொண்டார், திரு காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோயில் குருக்கள் ஸ்தல அர்ச்சகர் மாணிக்கவாசகம், ஜலீலூர் ரகுமான் தாவூதி தலைமை இமாம் மதீனா பள்ளி வாசல், சாமுவேல்,
சிஎஸ்ஐ தேவாலயம் ஃபெரோஸ் கான் தலைவர் கோட்டைமேடு , ராஜப்பன் மாநில குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளர் நயினார் முகமது பெரிய பள்ளிவாசல் உத்தமபாளையம் சீனிவாசன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கல்லூரி உத்தமபாளையம் பட்டிமன்ற தலைவர் எஸ் எம் எஸ் ஜோசப் அந்தோனி பங்குத்தந்தை விண்ணரசி அன்னை ஆலயம் அப்துல் கலாம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரிய பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தைச் சேர்ந்த சமூகப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.