BREAKING NEWS

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பாலர் பட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

 

இந்த இசை போட்டியில் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியில் இருந்து வந்த மைக் செட் உரிமையாளர்கள் கொண்டு வந்த மைக் செட்டுகளை திறந்தவெளியில் அமைத்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். இதில் ஏராளமான மைக் செட் உரிமையாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

 

 

இந்த போட்டியில் கலந்து கொண்ட மைக்செட் உரிமையாளர்கள் கூறுகையில் நலிவடைந்து வரும் இந்த தொழிலை மேம்படுத்துவதற்காக முந்தைய அரசிடம் நிறைய கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தோம்.

 

அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பழங்கால முறையை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்துவதற்கு தற்போதைய அரசு உதவி புரிந்து வருவதாகவும் மேலும் நலிவடைந்து வரும் மைக் செட் தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 

எந்த மைக் செட்டில் இருந்து அதிக தூரத்திற்கு தெளிவான பாடல் கேட்கிறது என்பதை வைத்து வெற்றியாளரை தீர்மானம் செய்வார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று மைக் செட் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை அன்பளிப்பாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS