தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் கோவையில் நடைபெறும் மாநில அளவான ஸ்கேட்டிங் போட்டிக்கு போடியைச் சேர்ந்த ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்கள் பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போடி செய்தியாளர் : மு.பிரதீப்.
தேனி மாவட்டம், வருகின்ற நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற இருக்கிறது.
சுமார் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் இந்த போட்டியில் கோடியிலிருந்து மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் தமிழ் ரோலர் அகாடமியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7 முதல் 9வயது வரை உள்ள பிரிவில் கிருத்திக்,9 முதல் 11 வயது வரை உள்ள பிரிவில் ரிதீஸ்வரன், கிஷானு,11 முதல்14 வயது வரை உள்ள பிரிவில் நேகவி, ஹரி தர்ஷன்,14 முதல் 17 வயது வரை உள்ள பிரிவில் ஜெனியுனியா,17 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் தமிழன், சரவணன், வேணு ரமணி, கவின் ரியாஸ் ஆகியோர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர்களை பெற்றோர் சங்க தலைவர் சோனை முத்து, தமிழ் ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த சதீஷ்குமார், செயலாளர் சர்மிளா மணிகண்டன் ஆகியோர் பாராட்டி வெற்றி பெற வாழ்த்தினர்.