BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து மிரட்டிய கும்பல் – சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து மிரட்டிய கும்பல் – சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா இவரது கணவன் தாமோதர கண்ணன் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

 

 

இந்நிலையில் லாவண்யா மற்றும் அவரது தாயுடன் வசித்து வருகிறார். லாவண்யாவின் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடு போய் உள்ளது இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை கேட்டுள்ளனர்.

 

சிசிடி கட்சிகளை லாவண்யா கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று தீபாவளி தினத்தன்று லாவண்யா வீட்டிற்கு சென்ற சிலர் அவரின் வீட்டின் வாசலில் பட்டாசை வெடிக்க வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யாவின் தாயார் யார் என்று விசாரித்துள்ளார் அப்போது அவ்வழியே சென்ற சிலர் அவரை மிரட்டி உள்ளனர் பின்னர் லாவண்யா வெளியே வந்து யார் என கேட்டுள்ளார்.

 

அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த அருவாள் கொண்டு மிரட்டி உள்ளனர் மேலும் வீட்டின் சுவர் மீது ஏறி வீட்டின் போர்ட்டிகோவில் நின்றிருந்த கார் மீது ஏறி அரிவாளை வைத்து மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

 

இது குறித்து லாவண்யா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் துறையினர் மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ், உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

கோவில்பட்டி பகுதியில் கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி வழங்கிய குடும்பத்தை அரிவாளை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் இது தொடர்பாக சிசிடி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )