BREAKING NEWS

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் சுமார் 150 க்கும் சீல் வைப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் சுமார் 150 க்கும் சீல் வைப்பு.

 

 தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் சுமார் 150 க்கும் மேல் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. 

 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக போடி வினோபாஜி காலனி சேர்ந்த முனைவர் பாண்டி குமார் என்பவர் போடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் வாடகை எவ்வளவு ஆண்டுக்கு இதன் மூலம் போடி நகராட்சிக்கு வருவாய் எவ்வளவு என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டது அடிப்படையில் இந்த நடவடிக்கையால்,..

 

 

 பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த கடைகள் ஏலம் எடுக்கப்பட்டு மாத வாடகைகள் செலுத்தப்பட்டு வருகின்றனர்.

 

 தற்போது ஒரு வருடத்திற்கு மேல் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் கடைகள் டெபாசிட் தொகை செலுத்தாத கடைகள் கணக்கிடப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேல் வாடகை நிலுவைத் தொகைகள் உள்ள கடைகள் இன்று சீல் வைக்கப்பட்டன.

 

 மொத்தம் 1கோடியே 36 லட்சம் ரூபாய் வாடகை நிலுவைத் தொகை உள்ள சுமார் 40 கணக்கிடப்பட்டு 9 கடைகளுக்கு இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்டன.

 

 மாவட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக கடை வைத்திருப்பவர்களுக்கும் நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

 

 உணவு விடுதிகள், பழக்கடைகள் சலூன்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

 

 மேலும் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரியப்படுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )