தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.
போடி செய்தியாளர் மு.பிரதீப்.
இன்று காலை வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் உள்ள தங்கும் அறையில் விஜய்(19) என்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடன் தங்கி இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சிங்கம்புணரி காளாப்பூரைச் சேர்ந்த விஜய்(19) த /பெ. பாண்டியன் என்பவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இறந்தவரின் உடலை போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இதே இடத்தில் சுமார் 40 நாள்முன்பு கிஷோர் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
40நாள் இடைவெளியில் ஒரே அறையில் ஒரே இடத்தில் நடந்த இரண்டு தற்கொலை சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.