BREAKING NEWS

தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி மலை கிராமத்தில் அஇஅதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா.

தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி மலை கிராமத்தில் அஇஅதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா.

போடி செய்தியாளர்
மு.பிரதீப்.

 

மலைவாழ் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் அஇஅதிமுகவின் 51வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

 

தேனி மாவட்ட மாண்புமிகு அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி கொட்டக்குடி கிராமத்தில் வசிக்கும் ரேஷன் கார்டு உள்ளவர்களை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் 110க்கும் மேற்பட்ட பளியர் மற்றும் கென்னடியர் சமுதாய மக்கள் அனைவருக்கும் இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகள் வழங்கினார்.

 

விழாவில் மேல சொக்கநாதபுரம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் தொட்டப்பன் பத்திரகாளிபுரம் முன்னாள் கிளைச் செயலாளர் முத்துராஜ் டொம்புச்சேரி அம்மா பேரவை செயலாளர் *ராஜ்குமார் கொட்டக்குடி கிளை அவைத்தலைவர் பாலு கார்த்திக் ராமர் லட்சுமி தனம் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )