தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மீன் பிடிக்கும் மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக தங்களது பகுதியில் உள்ள 8கிராமங்களான சக்கரை பட்டி, பின்னதேவன்பட்டி, சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட,..
8 கிராமங்களை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களை மீன்பிடிக்கவிடாமல் வைகை புதூர் கிராமத்தை சேர்ந்தவர்களை மட்டும் மீன்பிடிக்க விட்டு ஒருதலைப்பட்சமாக செயல்படும் வைகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கணடன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை வழங்கினர்.
CATEGORIES தேனி