தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேரடித் தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் காணிக்கராஜ் என்பவர் அப்பள்ளியில் மாடியில் வைத்து பத்து வயது சிறிமியை பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கடந்த 9-7-2022 தேதி அன்று பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மேற்கண்ட நபரால் பல மாணவிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதால் மேற்படி பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களிடம் விரிவான ஆய்வு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரவும் மேலும் பள்ளியின் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கூறியும் தென்னிந்திய பிளாக் கட்சி தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆணைக்கினங்க தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையிலும் தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி ஜீவா, சின்ன பாண்டி , பெரியகுளம் நகரபொதுச் செயலாளர் பழனிச்சாமி இவர்கள் முன்னிலையிலும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் நகரம் ஒன்றியம் கிளை நிர்வாகிகள் என ஏராளமான கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
