தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பெரும்பாலான ஆண்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் நிலையும்,
அன்றைய தினத்தில் மதுவினால் சில குடும்பங்களில் வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக கூறி தீபாவளி பண்டிகை தினத்தன்று முன் தினமும் பின் தினமும் ஆக மூன்று தினங்களுக்கு விபத்துகளும் வன்முறைகளும் நிகழாமல் இருந்திட,
முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என சிவசேனா கட்சியின் சார்பாக மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதல்வர்க்கு கோரிக்கை மனு அளித்தனர்.
மனு வழங்கும் நிகழ்வில் சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவர் கருப்பையா, மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.