BREAKING NEWS

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான 2022 -23 கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது.

 

அதன்படி தேனி மாவட்ட விளையாட்டு திடலில் கபடி போட்டி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையேந்து பந்து, நீச்சல், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளை இன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.

 

 

அப்போது தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், தேனி நகர மன்ற தலைவர் ரேணு பிரியா, தேனி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் தேனி ஆட்சியர் கூடைப்பந்து, இறகுப்பந்து போன்ற போட்டிகளை விளையாடி துவக்கி வைத்தார்.

 

 

இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தேனி மாவட்ட ஆட்சியர் விளையாட்டு வீரர் வீராங்கனை களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஜோதியை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

CATEGORIES
TAGS