தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 2025ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 2025ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல் தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மேல் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


இதனைத்தொடர்ந்து மேலப்பேட்டை உறவின் முறை தலைவராக ராஜமோகன் உப தலைவராக கணேஷ் பொதுச்செயலாளராக ஆனந்தவேல் பொருளாளராக பழனியப்பன் ஆகியோரும் மேலும் 12 ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
CATEGORIES தேனி
