BREAKING NEWS

தேனி ஶ்ரீரெங்கபுரத்தில் சிலம்ப போட்டியில் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் சாதனை படைத்த மாணவர்கள்.

தேனி ஶ்ரீரெங்கபுரத்தில் சிலம்ப போட்டியில் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் சாதனை படைத்த மாணவர்கள்.

தேனி ஶ்ரீரெங்கபுரத்தில் சிலம்ப போட்டியில் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் மற்றும் நூதன தனிதிறன் போட்டியில் சாதனை படைத்து சோழன் சாதனை புகத்தகத்தில் இடம்பெற்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள்

 

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஶ்ரீரெங்கபுரத்தில் தீபம் சிலம்ப தற்காப்பு கலை மற்றும் அறக்கட்டளை நிறுவனம் சார்பாக தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலை கழகம்,

 

 

மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் தொடர்ந்து 5மணி நேரம் சிலம்பத்தில் பாவலா வரிசையுடன் அடிமுறையும் சேர்த்து சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை நிகழ்ச்சியில்,

 

சேலம் ஈரோடு கோவை சென்னை தர்மபுரி உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 173மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொடர்ந்து காலை 10மணி முதல் மாலை 3மணி வரை சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

 

 

மற்றும் ஶ்ரீரெங்கபுரத்தை சேர்ந்த 8வயது ஹரிஸ் என்ற மாணவன் 50நிமிடங்களில் ஆயிரம் முறை தோப்புகரணம் போட்டு கொண்டே தனிதிறன் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.

உலக சாதனை படைத்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

 

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் பாராட்டு தெரிவிக்கபட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தீபம் சிலம்ப தற்காப்பு அறகட்டளை நிறுவன தலைவர் ஈஸ்வரன் தீபம் சிலம்ப தற்காப்புகலை சிலம்ப மாஸ்டர் சுந்தரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )