தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழுந்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்து கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு அதில் 40 மனுக்கள் தேர்வு செய்து பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல்.முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, மரக்கன்றுகள், வேளாண்மை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுகளையும் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் வட்டாட்சியர் கோமதி, தனி வட்டாட்சியர்கள் காந்திமதி, சண்முகம், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இம் முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.