BREAKING NEWS

தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்.

தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவிப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

 

இக்கோயிலில் ஆண்டுதோறும் பெருமாள் மற்றும் தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் தெப்ப உற்சவத்தையொட்டி நேற்றைய முன்தினம் கோவில் குளத்தில் பெருமாள் தெப்ப உற்சவமும் அதனைத் தொடர்ந்து.

 

நேற்று தேசிகர் தெப்ப உற்சவமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் செய்திருந்தார் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )