தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த
ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் சகாயராணி இருவரும் சேர்ந்து தேவகோட்டை டவுனில் அன்னை சகாயராணி என்கிற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்கள்.
இதில் தலைமை ஆசிரியை சகாயராணி அவர்களின் கணவர்
ஜான் உத்தமநாதன் என்பவர அங்கு படித்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்து தகாத முறையில் நடந்துள்ளார். இதை துணை தலைமை ஆசிரியர் சகாயராணி இடம் மாணவிகள் கூறிய போது அவர் அதை கண்டு கொள்ளாமல் ஏளனமாக பேசியுள்ளார்.
அதனால் அங்கு படித்த மாணவிகளிடம் ஜான் உத்தமநாதன் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்ததை பல்வேறு மாணவிகள் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்
ஜான் உத்தமநாதன் கல்லூரி நிறுவனர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் காவல்துறை அடைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.