BREAKING NEWS

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.

 

தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.

 

 

அந்த வகையில் மார்கழி மாதத்தில் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை காஞ்சிபுரம் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,

 

 

காஞ்சி நகர மக்கள் அதிகாலை நேரத்திலேயே குடும்பத்துடன் எழுந்து,

பழையன கழிதலும், புதியன புகுதலும்,எனும் பழமொழிக்கு ஏற்ப மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி,புதிய நல்லெண்ணங்களை வரவேற்கும் விதமாக, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்து வைத்த, தேவையற்ற பொருட்களை தங்கள் வீடுகளின் வாசல்கள் முன்பு குவித்து,

 

 

சிறுவர் சிறுமியர்களான தங்கள் குழந்தைகள் போகி மேளத்தை கொட்டிட தீட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தைப்பொங்கலை வரவேற்று வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS