தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம்,
மின்சார விபத்துக்களில் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமப்பட்டு வருபவர்களுக்கும் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் தீப ஒளி திருநாள் விழாவை முன்னிட்டு புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் நிதியுதவிகளும் வழங்கும் விழா நடைபெற்றது .
தமிழகத்திலே திருப்பூரில் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டு தோறும் தீபாவளி, தைப்பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு கதர் வேஷ்டி, சட்டை, இனிப்பு வகைகள், பட்டாசுகள், அரிசி, வெல்லம், உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தொமுச சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர் வரும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க படி,
வடக்கு மாவட்ட திமுகழக செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டிதலின் படியும் தொமுச பேரவை மாநில துணை செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு.நாகராசன், வடக்கு மாநகரச் செயலாளரும் , மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர்கள் அறிவுறுத்தலின் படியும் திருப்பூர் வடக்கு மாநகரம் போயம்பாளையம் சக்திநகரிலுள்ள தொமுச அலுவலகத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், ஏற்பட்டில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ஆர் .ரெங்கசாமி ஆகியோர்கள் தலைமையிலும் பகுதி அவைத்தலைவர் தயானந்தம், 7 வது வட்ட திமுகழக செயலாளர் சக்திநகர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
நவம்பர் 2 ம் தேதி மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணனின் தந்தை சி. அடைக்கலம், தாய் குப்பம்மாள் ஆகியோரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னி்ட்டு அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் முதலில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ச்சியாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை செயலாளர் ஈ.பி. அ.சரவணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பழனிச்சாமி, பெருமாநல்லூர் ஈ.பி. விஜயன் மற்றும் நிர்வாகிகளும் மின்சார வாரிய தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் திருப்பூர், அவினாசி, காங்கேயம், பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, பெருமாநல்லுர் ,சேவூர், குன்னத்தூர் , ஈரோடு, சேலம், மேட்டூர் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடைகள் , இனிப்பு வகைகள், பட்டாசு பெட்டகங்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய தீப ஒளி திருநாள் பரிசை இணை பொதுச் செயலாளர் ஈ பி.அ.சரவணன் மற்றும் பொது செயலாளர் ரெங்கசாமி வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்கள் தொமுச நிர்வாகிகள் ஜின்னா பாய், கார்த்திகேயன், தண்டபானி, பாலமாதேஷ் உள்ளிட்டவர்கள்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை ஈ.பி.அ.சரவணன் செய்திருந்தார்.
