தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு சுகாதாரம்-1 இணை இயக்குநா் மு.அ.முகம்மதுகனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் வரும் 2023-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணையதளம் மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். உரிமத்தை புதுப்பிக்க இணையதள முகவரியில் இணையதள முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம், ஒப்பந்த தொழிலாளா் சட்டம், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரியும் தொழிலாளா் சட்டத்தின் கீழான பதிவுச் சான்றுகளுக்கு ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால்,
வங்கி வரைவோலை, சலான் மூலம் உரிய தொகையை செலுத்தி, இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதன் மூன்று நகல்களுடன் வரைவோலை அல்லது சலான் உடன் இணைத்து அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.