நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மணல் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமாவாசை தினத்தன்று நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நகர மன்ற உறுப்பினர் ஜான் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

திருவள்ளூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம் ஆர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள தூண்களில் கட்டப்பட்டுள்ள தனியார் கேபிள் டிவி ஒயர்கள் தொங்குவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும்,
கம்பங்கள் சேதம் அடைவதை தவிர்க்கவும் கேபிள் வயர்களை அகற்றுதல் மற்றும் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை பகுதறிந்துள்ளதால் அதை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பன்னிரண்டாவது வார்டு கவுன்சிலர் தாமஸ் பேசும் போது வார்டு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்தி தர வேண்டும் மேலும் பல தெருக்களில் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதால் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது ஆகையால் அந்த குற்ற சம்பவங்களை தடுக்க தெரு விளக்குகளை சீராக அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஆனால் திருவிளக்கு அமைக்காமல் நகராட்சியில் தெருவிளக்கு அமைத்ததாக கணக்கு காட்டப்படுகிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகளை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து கவுன்சிலர் ஜான் பேசும்போது திருவள்ளுவரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இயங்கி வரும் மணல் குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் தினசரி நகராட்சி பகுதி நெடுஞ்சாலைகளுக்குள் வந்து கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றது சில நேரம் விபத்துகளும் நிகழ்கின்றன மேலும் லாரிகளில் தார்ப்பாய் மூடாததால் சாலை முழுவதும் மண் கட்டிகள் விழுந்து இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்குகிறது.
மேலும் மணல் லாரிகளால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது எனவே மணல் லாரி போக்குவரத்து நெரிசலை குறைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அமாவாசை தினத்தன்று நகராட்சி சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் நகர மக்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை விட முடியாமலும் வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் எனவே இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கவுன்சிலர் அய்யூபலி பேசும்போது நகராட்சி 17வது வார்டு அதிக பரப்பளவை கொண்டுள்ளது.
இங்கு தூய்மை பணிக்கு ஆள் பற்றாக்குறையால் ஆங்காங்கே குப்பைகளும் கழிவுநீரும் தேங்கியுள்ளது எனவே கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பார்வையாளர்கள் என ஏராளமானார் பங்கேற்றனர்.