BREAKING NEWS

நடிகர் பூ ராம் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் பூ ராம் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

மாரடைப்பு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் பூ ராம், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் ராமு. இதனால் இவரை சினிமாவில் பூ ராமு என்றே அழைத்தனர்.

அதனைத் தொடரந்து, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த குணச்சித்ர நடிகராக வலம் வரும் இவர் தனது கேரக்டருக்கான நடிப்பை அப்படியே பிரதிபலித்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில் ராமு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராம் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )