நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இன்று 22-6-2022 தமிழகத்தின் முன்னனி நடிகர் விஜய் -ன் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி தேவர் காலனியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.


பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் வேஷ்டி சேலை அன்னதானம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் லெப்ட் பாண்டி தலைமையில் வழங்கபட்டது.
CATEGORIES தேனி
