நத்தத்தில் தமுமுக, மமக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தமுமுக, மமக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
நத்தத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் சேக்பரீத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வுக்காக தேர்தல் அதிகாரியாக மாநில செயற்குழு உறுப்பினர் தைக்கால் முபாரக் கலந்து கொண்டு தேர்வின் சாராம்சங்கள் குறித்து உறுப்பினர்களிடம் விளக்கினார். முன்னதாக தமுமுக மமக சார்பில் சமூக சேவகர் விருதினை நத்தத்தைச் சேர்ந்த முகமது ஹாலித், முகம்மது சிக்கந்தர் துல்கருணை, ராமமூர்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமுமுக மமக மாவட்ட தலைவராக சேக் பரீத்தும், தமுமுக மாவட்ட செயலாளராக முகம்மது ரியாஜ், மமக மாவட்ட செயலாளராக முகம்மது ரிஜால் தமுமுக மமக மாவட்ட பொருளாளராக அப்துல் அகது ஆகியோரை ஏகமனதாக தேர்வு செய்தனர். புதிய நிர்வாகிகளை மாவட்டத்தின் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினர்.
நகர செயலாளர் ஜல்வத்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நத்தம் நகரத் தலைவர் முகம்மது அபு பக்கர் சித்திக் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
