BREAKING NEWS

நத்தத்தில் பஸ்நிலையம் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்.

நத்தத்தில் பஸ்நிலையம் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் நத்தம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை 60-வது பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் பேருந்து நிலையம் எதிரே அமமுக நத்தம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

 

இதேபோல் கோவில்பட்டி பகுதியிலும் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் மலைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் அழகு, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருள் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )