நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 4ந் தேதி முதல் இன்று 7-ந்தேதி காலை வரை பல கட்டமாக ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11.30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பாராளுமன்ற உறுப்பினர் பா.வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.