நத்தம்- தொகுதியை சேர்ந்த திமுக புதிய நிர்வாகிகள் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்,
திமுக வில் 15 வது தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் பெயரை தலைமைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் நத்தம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம் எல் ஏ ஆண்டி அம்பலம் மாநில செயற்குழு உறுப்பினராகவும்,
சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் மாவட்ட பொருளாளராகவும், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, முத்துக்குமாரசாமி ஆகியோர் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகவும், சுந்தர்ராஜன் மாவட்ட துணைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் கழக துணை பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி ஆகியோரிடம் சென்று புத்தகங்களை வழங்கி வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ. .பி.செந்தில்குமாரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மேலும் நத்தம் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல தரப்பினரும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
