BREAKING NEWS

நரசிங்கபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

நரசிங்கபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம், தலைவர் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டதில் துணைத்தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை சுத்தம் செய்து தரவேண்டும், குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வதால் மக்களுக்கு போதிய குடிநீர் பற்றாக்குறையாகவும் உள்ளது, குடியிருப்பு பகுதியில் முட்புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் ஏனென்றால் அப்பகுதியில் விஷப்பூச்சிகள் அதிகளவில் வீட்டின் அருகே உலாவுவதாக பொதுமக்கள் அச்சம் அடைவதாக குற்றம் சாட்டினர்.

அனைத்து வார்டு பகுதியிலும் விரைவில் தெருவிளக்கு அமைக்க வேண்டும், குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள தார்சாலை குண்டு குழியுமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மழை காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் இதனால் சாலையை உடனடியா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )