நரிக்குறவர் காலனியில் விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் விஸ்வநாத நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் முகநூல் நண்பர்கள் குழு ஆகியவைஇணைந்து நரிக்குறவர்கள் அதிகமாக வசிக்கும் காலனி பகுதியில் சுத்தம் செய்தல் மற்றும்சுகாதார விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் திரு சுப்பிரமணியன் வட்டச் செயலாளர் தர்வேஸ் மைதீன் சுகாதார ஆய்வாளர் திரு பாலசுப்ரமணியன் சிட்டி டிரைவிங் ஸ்கூல் திரு நைனா முகம்மது விசுவநாத நகர்குடியிருப்போர் சங்க பொருளாளர் திரு மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் நரிக்குறவர் காலனி சுத்தப்படுத்தல் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு டேவிட் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி திட்ட அலுவலர் அண்டோ ஆரோக்கிய ஜோதி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.