நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!
வாரணாசியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மே 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
அன்றைய தின நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் வருகை புரியுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
அந்த வகையில் கடைசி கட்ட தேர்தலாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 13 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மூன்றாம் முறையாக வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதற்கென பிரதமர் மோடி மே மாதம் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களை பங்கேற்குமாறு பாஜக அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் புதிய நீதி கட்சியின் தலைவர், வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே .வாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.