BREAKING NEWS

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மேத்யூ தாரகன் தலைமையில் நடைபெற்றது.

 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் அரவிந்த், இணை செயலாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

 

இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:

 

1. தமிழக அரசு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் குத்தகை இடங்களில் நடத்துவதற்கு, 30 வருடங்களுக்கு குத்தகை ஆவணம் பெற வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

 

இது நடைமுறைக்கு உகந்ததல்ல. மேலும், பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணை ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

 

குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் குத்தகை ஆவணம் பெறவேண்டும் என்கிற நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். மூன்று வருடத்திற்கு ஒருமுறை குத்தகை ஆவணம் புதுப்பிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

 

2.நடப்பு கல்வி ஆண்டிலும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தே உள்ளது. 

 

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே, எந்தவித நிபந்தனையும் இன்றி கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டண தொகையை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும். 

 

3.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் பெற்றோர்களுக்கு அண்மை பள்ளிகளாக சுமார் 5000 பள்ளிகள் தமிழ்நாடெங்கும் செயல்பட்டு கல்விப் பணியாற்றி வருகிறது. மெட்ரிக் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான விதிமுறைகளையே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கும் அமல்படுத்துவது ஏற்புடையது அல்ல.

 

ஏற்கனவே செயல்பட்டு வரும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் தொடர்ந்து இயங்கிடவும், புதிய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் அமைத்திட புதிய எளிய வழிமுறைகளை ஏற்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

4.பள்ளிகள் சீராக இயங்கிடவும், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் இடையே ஒழுங்கான நிர்வாக முறை அமையவும், பள்ளி மேலாண்மை காப்பாற்ற படுவதற்கும், படிக்கும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் பெற்றுதான் மற்றொரு பள்ளியில் சேர வேண்டும் என்கிற பழைய நடைமுறையை அரசு பின்பற்ற வேண்டும்.

 

2023 -24 ஆம் கல்வி ஆண்டில், இலவச கல்வி கட்டாய உரிமை சட்டத்தின் இயல்பு கெடாமல் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கும் நடைமுறையை கண்டிப்பாக அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட பொருளாளர் ராஜாபாவா நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS