நல்லூரில், நல்லூர் ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நல்லூர் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து பொருள்களின் விலைவாசி உயர்வை கண்டித்து நல்லூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட பால்வளத்துறை தலைவரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான பச்சமுத்து தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினருமான பொன்னேரி முத்து முன்னிலை வகித்தார்.

தலைமைக் கழக பேச்சாளரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான முருகு மணி கலந்து கொண்டு திமுக அரசின் உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
மேற்கு மாவட்ட அவை தலைவர் தங்கராசன் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதியதொரு ஆட்சி அமைக்க கட்சியினர் துணை நிற்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம், ஒன்றிய இணைச் செயலாளர் ரசியா லட்சுமணன், ஒன்றிய துணை செயலாளர்கள் இளவரசி சிவஞானம், செல்வராசு, ஒன்றிய பொருளாளர் நடேச ராஜேந்திரன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் ராஜலட்சுமி அன்பழகன், முனுசாமி, தண்டபாணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் வீராச்சாமி,

மருத்துவர் அணி சம்பத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேவை ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் வாசு தங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாக அருள்மணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜலட்சுமி ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் அபி பத்மாவதி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரத்தினசபாபதி, ராமலிங்கம், டென்சிங், டாஸ்மாக் மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் மதி கோபி,

முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவஞானம், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேப்பாக்கம் கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞரணி ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் குமரேசன், கிளை நிர்வாகி முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக அருள்தாஸ் நன்றி உரையாற்றினார்.
