நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மற்றும் நகர் கிராமத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் கிளைச் செயலாளர்கள் நல்லூர் தாண்டவராயன், நகர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு நடவடிக்கை எடு என்று கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். அதன் பின்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அதிகாரிகளிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் அமாவாசை, மேற்கு மாவட்ட செயலாளர் பூவையார் பாண்டியன், மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட பொருளாளர் மணிவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.