BREAKING NEWS

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார், துணைப் பெருந்தலைவர் ஜான்சிமேரி தங்கராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, எஸ்ஆர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

கூட்டத்தில் ஒன்றாவது வார்டு ஜெயசுதா, இரண்டாவது வார்டு ராஜா, மூன்றாவது வார்டு ஏழுமலை, ஏழாவது வார்டு சிவகுமார், பத்தாவது வார்டு பச்சமுத்து, பதினோராவது வார்டு மேகராஜன், பதினாறாவது வார்டு வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் உறுப்பினர்கள் பார்வைக்கு படித்துக் காண்பிக்கப்பட்டது, பின்னர் பின்னர் 11 வது வார்டு கவுன்சிலர் மேகராஜன் எழுந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்திற்குள், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற பகுதிகளில் அம்பேத்கரின் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்றும்,…

 

 

அம்பேத்கர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கூண்டுகளை அகற்ற வேண்டும் என்றும் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டி பேசினார். பின்னர் அவற்றை மனுவாக ஒன்றிய பெருந்தலைவரிடம் வழங்கினார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய பெருந்தலைவர் செல்வி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )